தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளத்தில் விழுந்து மாணவர் பலி

குளத்தில் விழுந்து மாணவர் பலி

குளத்தில் விழுந்து மாணவர் பலி


ADDED : பிப் 16, 2025 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : வீராம்பட்டினம் கோவில் குளத்தில் தவறி விழுந்த, பள்ளி மாணவர் இறந்தார்.

நாமக்கல் அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர், புதுச்சேரி உழவர்கரை பகுதியில், குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் குணா, 11, உழவர்கரை அரசு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் பகுதியில், பொதுப்பணித்துறை மூலம் பைப் லைன் புதைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு லோகநாதன் அவரது மனைவியும் வேலை செய்து வந்தனர். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அவர் தனது மகனை வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தார்.

குணா, வீராம்பட்டினம் தெப்பக்குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, தரை வழுக்கி குளத்திற்குள் விழுந்தார். அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us