/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் இதழ் வெளியீட்டு விழா
/
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் இதழ் வெளியீட்டு விழா
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் இதழ் வெளியீட்டு விழா
வாசவி இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் இதழ் வெளியீட்டு விழா
ADDED : செப் 22, 2024 02:03 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வாசவி இண்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.
பள்ளி மாணவர்களின் படைப்புகள் குறித்து, இதழ் முதல் பதிப்பு வெளியிட்டு விழா நேற்று பள்ளியில் நடந்தது. பள்ளி முதல்வர் மாரிமுத்து வரவேற்றார். பள்ளி தாளாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.
இந்த பதிப்பில் ஆசிரியர்களின் பங்களிப்பும், முக்கியத்துவமும் இடம்பெற்றன. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கலெக்டர் குலோத்துங்கன் மாணவர் இதழை வெளிட்டு, மாணவர்களின் படைப்புகள் பற்றியும், அவர்கள் கல்வியில் முன்னேறும் வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.
தலைமை ஆசிரியை சுஜாதா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் செந்தில்ராஜ் நன்றி கூறினார்.