நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : கோட்டுச்சேரி, கணபதி நகரை சேர்ந்தவர் குமரன் மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கணவன் இறந்த நிலையில் மகள்களை கோமதி வளர்த்து வந்தார். மூத்த மகள் பிரியதர்ஷினி, 18, அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு இ.சி.இ., படித்து வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் என, தாய் கோமதியிடம் பிரச்னை செய்து வந்தார்.
அதற்கு படிப்பு முடிந்ததும் செல்லலாம் என, கூறினார்.
இந்நிலையில், பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.