/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேராசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
/
பேராசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
பேராசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
பேராசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ADDED : ஏப் 05, 2025 04:24 AM

புதுச்சேரி: இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிர்காமம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த இந்திரா காந்தி அரசு கலை, அறிவியல் கல்லுாரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட கல்லுாரி வளாகத்தின் கட்டடம் சேதமடைந்து, போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக கல்லுாரி வளாகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாகவும், பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனை கண்டித்து, நேற்று கல்லுாரிக்கு வந்த மாணவ, மாணவியர் காலை 10:30 மணியளவில் வகுப்புகளை புறகணித்து, நுழைவு வாயில் எதிரே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோரிமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் கல்லுாரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பேராசிரியர் பற்றாக்குறை போக்கவும், அடிக்கடி மின்தடை ஏற்படாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து புகார் அளிக்க தொகுதி எம்.எல்.ஏ., வை சந்திக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதற்கு, தற்போது எம்.எல்.ஏ., வெளியூரில் இருப்பதால், அவர், வந்தபின் சந்திக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

