ADDED : நவ 14, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம், பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது 19 வயது மகள் லாஸ்பேட்டை அரசு கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று (நவ.,13) காலை வழக்கம்போல் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர், தாய் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
