நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் ரத்ததானம் செய்தனர்.
கல்லுாரி முதல்வர் பாலாஜி ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் இந்தாண்டு இக்கல்லுாரியில் பயிலும் 17 மாணவிகள் அரசு மருத்துவமனைக்கு பேரணியாக சென்று அங்கு ரத்த தானம் அளித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமோதரன்,கல்லுாரி முதல்வர் பாலாஜி,பேராசிரியர் நளினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

