/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தென்னை வேருக்கு ஊட்டம் குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம்
/
தென்னை வேருக்கு ஊட்டம் குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம்
தென்னை வேருக்கு ஊட்டம் குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம்
தென்னை வேருக்கு ஊட்டம் குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம்
ADDED : டிச 22, 2025 05:35 AM

திருக்கனுார்: மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், தென்னை வேருக்கு ஊட்டம் அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
காட்டேரிக்குப்பத்தில், ஊர க வேளாண்மை பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் கல்லுாரி முதல்வர் மொகமத்யாசின் தலைமையில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராவ்கெலுஸ்கர், ராஜேந்திரபி ரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியின் கீழ் செயல்படும், வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள் , தென்னை மரத்தில் வேருக்கு ஊட்டம் அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து, விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.