/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சைக்கிள் ஓட்டினால் மனநிலை மாறும்' :மத்திய அமைச்சர் பேச்சு
/
'சைக்கிள் ஓட்டினால் மனநிலை மாறும்' :மத்திய அமைச்சர் பேச்சு
'சைக்கிள் ஓட்டினால் மனநிலை மாறும்' :மத்திய அமைச்சர் பேச்சு
'சைக்கிள் ஓட்டினால் மனநிலை மாறும்' :மத்திய அமைச்சர் பேச்சு
ADDED : டிச 22, 2025 05:34 AM

புதுச்சேரி: சைக்கிள் ஓட்டுவதால் சுற்றுச் சூழல் பாதுகாக்க முடியும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த 'பிட் இந்தியா' சைக்கிள் பேரணி யில், புதுப்பிக்கப்பட்ட 'பிட் இந்தியா' மொபைல் செயலியை, அறிமுகம் செய்து வைத்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:
ஓராண்டிற்கு முன் பரிசோதனை அடிப்படையில் வாரம் ஒருநாள் சைக்கிள் ஓட்டுவதை 500க்கும் குறைவான நபர்களுடன் துவக்கினோம். தற்போது, நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டுகின்றனர்.
வாரம் ஒரு நாள் சைக்கிள் ஓட்டுவதால் மனநிலையை மாற்றுகிறது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது. கார்பன் உமிழ்வை ஒரு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் பெருமளவு குறைக்கிறது.
ஒவ்வொரு குடிமகனும் இதில் பங்கேற்கலாம்' என்றார்.