/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் களப்பயணம்
/
சுற்றுச்சூழலை பாதுகாக்க மாணவர்கள் களப்பயணம்
ADDED : மார் 06, 2024 03:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு களப் பயணம் சென்றனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, சமுதாய நலப்பணிதிட்ட மாணவர்கள் பள்ளியில் இருந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆரோவில் தாவரவியல் பூங்காவிற்கு களப் பயணம் சென்றனர். நிகழ்ச்சியில் சத்தியமூர்த்தி, பாலகங்காதரன் ஆகியோர் இயற்கையை பாதுகாப்பது குறித்து விளக்கினர்.
சமுதாய நலப்பணித்திட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் சூற்றுச்சூழல் பற்றி விளக்கினார்.ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வெரோனஸ், விஜலட்சுமி, கவிதா, லிதா, ஜென்னி ஆகியோர் செய்திருந்தனர்.

