/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஹெல்மெட் அணியாத மாணவர்களை அனுமதிக்க கூடாது'
/
'ஹெல்மெட் அணியாத மாணவர்களை அனுமதிக்க கூடாது'
ADDED : பிப் 15, 2024 04:48 AM
புதுச்சேரி: ஹெல்மெட் அணியாத மாணவர்களை பள்ளி வளாகத்தல் அனுமதிக்கக்கூடாது என போக்குவரத்து செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கம்பன் கலையரங்கில் நடந்தசாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவில்,போக்குவரத்து துறை செயலர் முத்தம்மா் பேசும்போது, 'ஆஸ்திரேலியாவின் ஒரு நகரில் தொடர் விபத்தால் உயிரிழப்பு ஏற்பட்டது. அந்நகரில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, 100 சதவீதம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க துவங்கியதும், விபத்துகள் குறைந்தது.
அதுபோல் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை புதுச்சேரியில்செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வரும் மாணவர்களை பள்ளி, கல்லுாரி வளாகத்திற்குள் நிர்வாகங்கள் அனுமதிக்க கூடாது' என்றார்.

