/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மாணவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 12, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்ததை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று அண்ணா சாலை சந்திப்பில், மாலை 5:00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் சங்க செயலாளர் பிரவின் குமார் கண்டன உரையாற்றினார்.
ஜனநாயக மாதர் சங்க முனியம்மாள், இளவரசி, மாதர் சங்க உறுப்பினர்கள், ஜனநாயக வாலிபர் சங்க மத்திய குழு உறுப்பினர் ஆனந்த், மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.