தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு

 மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு

 மாநில டேபிள் டென்னிஸ் போட்டி சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு


ADDED : ஜன 29, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் லாசா பந்து கிளப் அணி வீரர்கள் பதக்கங்களை குவித்தனர்.

புதுச்சேரி மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் லாசா டேபிள் டென்னிஸ் கிளப் அணி வீரர்கள் தலைமை பயிற்சியாளர் பாலசுப்ரமணியன் உதவிப் பயிற்சியாளர் ஹரிஷ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், லாசா கிளப் அணி வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

இதில் பல்வேறு பிரிவுகளில் கிளப் அணி வீரர்கள் பதக்கங்களை அள்ளினர். மாணவர் துருவா 19 வயத்திற்குட்பட்டோர் இளைஞர் பிரிவு, 17 வயதிற்குட்பட்ட ஜூனியர் ஆண்கள், 15 வயதிற்குட்பட்ட சப்-ஜூனியர் ஆண்கள் பிரிவுகளில் வெற்றி பெற்றார்.

மாணவர் அருணேஷ் தனது வயதுப் பிரிவைத் தாண்டி உயர் பிரிவுகளிலும் வெற்றி பெற்றார். 13 வயதிற்குட்பட்ட கேடட் ஆண்கள் வென்றார். மேலும், 15 வயதிற்குட்பட்ட சப்-ஜூனியர் ஆண்கள், 17 வயதிற்குட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவுகளில் இரண்டாம் இடம் பெற்றார்.

இது தவிர மாணவர் திவ்யேஷ் 13 வயதிற்கு உட்பட்ட கேடட் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம், மாணவர் தஸ்வந்த் 11 வயதிற்கு உட்பட்டோர் இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடம், மாணவர் ஜான் மிராண்டா ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினர்.

மாநில அளவிலான போட்டியில் சாதித்த மாணவர்களை பயிற்சியாளர்கள் பாலசுப்ரமணியன், ஹரிஷ் குமார் பாராட்டி, கவுரவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us