ADDED : ஜன 29, 2026 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு காங்., சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டது.
தொகுதி பொறுப்பாளர் விஜயகுமாரி, வழக்கறிஞர் அணி தலைவர் மருது பாண்டியன், மாநில செயலாளர் ராஜாராம், வட்டார காங்., தலைவர் ராஜமோகன், முன்னாள் கவுன்சிலர் குமரன், சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

