/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம்
ADDED : ஜன 29, 2026 05:38 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் திருத்தி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் ஓட்டுப் போடும் முறைகள் பற்றி தெரிந்து கொள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் 30 இடங்களில் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து, புதுச்சேரி நகராட்சியில் செயல்படும் தேர்தல் நடத்தும் அதிகாரி எண். 7ல் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் செயல் விளக்க முகாமை நகராட்சி ஆணையர் (பொ) சுரேஷ் ராஜன் துவக்கி வைத்தார். ஏராளமானவர்கள் பங்கேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போடும் முறைகள் பற்றி ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர்.

