/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலில் வென்ற மாணவர்கள் சபாநாயகரிடம் வாழ்த்து
/
தேர்தலில் வென்ற மாணவர்கள் சபாநாயகரிடம் வாழ்த்து
ADDED : நவ 13, 2025 06:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற அகில பாரத வித்யார்த்தி பரிக் ஷத் மாணவர்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 75 இடங்களில் போட்டியிட்டு 35 இடங்களை ஏ.பி.வி.பி., கைப்பற்றியது.
அதில், மாணவர் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிட்ட அனைத்து ஏபி.வி.பி., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்கள் தலைவர் கீர்த்தனா, செயலாளர் அய்யனார் தலைமையில் சபாநாயகர் செல்வத்தை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சபாநாயகர் செல்வம் பணி சிறக்க வாழ்த்து கூறினார்.

