sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்

/

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்

 ஓடும் ரயிலில் ஓவியப்போட்டி மாணவர்கள், மகளிர் அசத்தல்


ADDED : மார் 09, 2026 04:14 AM

Google News

ADDED : மார் 09, 2026 04:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுவை மாநில ஓவியர் மன்றம் மற்றும் புதுச்சேரி ஓவியப் பள்ளி இணைந்து மகளிர் தினத்தை முன்னிட்டு ஓடும் ரயிலில் ஓவியப் போட்டியை நடத்தின.

போட்டியில் மாணவ, மாணவிகள், மகளிர்கள் என 70 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் வரை ரயிலில் நடந்தது. விழுப்புரம் செல்லும் வரை சிறப்பான முறையில் வண்ணம் தீட்டினர். பின், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி வரும் ரயிலில் அனைவரும் திரும்ப அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா புதுச்சேரி ஓவியப் பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக மாநில அரசு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை லட்சுமி பங்கேற்று பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் அன்னையர்களுக்கு 8, மாணவர்களுக்கு 8 என மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஓவியங்களை கலைமாமணி சரவணகுமார், ஓவியர் ஆனந்தராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்திருந்தனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை செல்வம் எமில் தலைமையில் ஓவியர் ஆசிரியர்கள் ராமலிங்கம், கார்முகிலன், வரதராஜன், ஷர்மிளா, ஜோஸ்பின் ஆகியோர் செய்திருந்தனர். போட்டிக்கு ஆதரவு அளித்த புதுச்சேரி ரயில் நிலைய மேலாளர் முரளி மற்றும் திருச்சி மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு மாநில ஓவியர் மன்றம், ஓவியப் பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. போட்டி ஓவியமன்ற தலைவர் இபேர் வழிகாட்டுதலின்படி நடந்தது.






      Dinamalar
      Follow us