ADDED : அக் 13, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சுப்பையா நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லித்தோப்பு சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், சம்பத், செந்தில்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, இ.கம்யூ., மாநில செயலாளர் சலீம், சேதுசெல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.