/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இசை, விளையாட்டு பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கல்
/
இசை, விளையாட்டு பயிற்சிக்கு விண்ணப்பம் வழங்கல்
ADDED : மே 01, 2025 04:57 AM

புதுச்சேரி: கோடை விடுமுறையை முன்னிட்டு, ஜவகர் குழந்தைகள் இல்லம், குழந்தைகளுக்கான பல்வேறு இசை மற்றும் விளையாட்டில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் விளையாட்டுகளான, கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் ஆகியவற்றை கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மணிவேல் தலைமையில், ஜவகர் சிறுவர் இல்லம் பகுதியில் நேற்று வழங்கப்பட்டது. புதுச்சேரி கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி உட்பட 9 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் வழங்கிய இடத்தில், நாளை மறுநாள் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

