/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கையெழுத்து இயக்க படிவம் காங்., தலைவரிடம் வழங்கல்
/
கையெழுத்து இயக்க படிவம் காங்., தலைவரிடம் வழங்கல்
ADDED : நவ 08, 2025 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஓட்டுத் திருட்டை கண்டித்து மகளிர் காங்., தலைவி நிஷா தலைமையில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட்ட படிவங்கள் மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி மாநில காங்., சார்பில், ஓட்டுத் திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, மாநில மகளிர் தலைவி நிஷா தலைமையில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் இரண்டாம் கட்டமாக பெறப்பட்ட 18 ஆயிரம் கையெழுத்து படிவங்களை மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம் நேற்று வழங்கினார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

