/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்பரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
/
சுப்பரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
ADDED : டிச 15, 2025 05:58 AM
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பரமணிய சுவாமி கோவில் கும்பாபி ேஷகம் விழா நேற்று நடந்தது.
ஏம்பலம் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சுப்பரமணிய சுவாமி கோவில் கும்பாபி ேஷகம் விழா நேற்று முன்தினம் காலை கணபதி, வின்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலை புண்ணியாகவாசம், பிரவேச பலி, முதல்கால யாகசாலை பூஜை, புற்றுமண் எடுத்தல், ரக்ஷபந்தனம், பூஜை ஹோமங்கள் நடந்தது.
நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, 9 மணிக்கு சுப்பரமணிய சுவாமிக்கு மகா கும்பாபி ேஷகம், 10.30 மணிக்கு விமான கும்பாபி ேஷகம் நடந்தது. திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

