/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
சுப்ரமணிய பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 10, 2025 01:17 AM

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத், நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் ஆகியோர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 218 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். நகர்புற பள்ளிகளுக்கு இணையாகவும், கொம்யூன் அளவிலான பள்ளிகளில் முதன்மை மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
மாணவர் சந்தீப்ராஜ் 594 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடமும், பள்ளி அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாணவர் தயாநிதி 593, மாணவி ராகவி 591 மதிப்பெண்கள் பெற்று 2 மற்றும் 3ம் இடம் பிடித்துள்ளனர்.
பள்ளி அளவில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 29 பேரும், 500க்கு மேல் 59 பேரும், 450க்கு மேல் 62 பேரும், 400க்கு மேல் 39 பேரும் பெற்றுள்ளனர்.
தமிழ் பாடத்தில் 6 பேர், ஆங்கிலத்தில் 5 பேர் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 4 பேர், வேதியியலில் ஒருவர், கணினி அறிவியலில் 26 பேர், வணிகவியலில் 2 பேர், கணினி பயன்பாட்டில் 4 பேர், கணக்குப் பதிவியலில் ஒருவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியலில் 3 பேரும், இயற்பியல் மற்றும் பொருளியல் தலா ஒருவர் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
கல்விப் பணியில் 36 ஆண்டுகளாக நகர்புற பள்ளிகளுக்கு இணையாக மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.