/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
/
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 30, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
முதலியார்பேட்டை தொகுதி, நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி, மூலவர் சுவாமிக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தனது சொந்த செலவில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
கோவில் நிர்வாகிகள், பொது மக்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.