/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
/
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 10, 2025 06:24 AM

புதுச்சேரி: சாரம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 2ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
புதுச்சேரி சாரத்தில் முத்து விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை 7:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாரானை நடந்தது.
இரவு 7:00 மணிக்கு மகா தீபாராதனையுடன், முத்து விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி, வைத்தீஸ்வரன், தையல்நாயகி அம்பாள், நாகமுத்து மாரியம்மன், அபய ஆஞ்நேயர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், அர்ச்சகர்கள் சிவராம குருக்கள், கார்த்திகேய குருக்கள், முத்துகுமாரசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

