ADDED : பிப் 04, 2025 05:50 AM
புதுச்சேரி: குருமாம்பேட் தனியார் கம்பெனியில் சேர்ந்த அசாம் தொழிலாளி, திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
அசாம் கோல்பூரா மாவட்டம், ரங்குஜூலி பகுதியைச் சேர்ந்த ஹேமன்ராய், 48; கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்து குருமாம்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் துாய்மை பணியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
குருமாம்பேட், ராகவேந்திரா நகர், ராகவேந்திரா கோவில் அருகில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் இடத்தில் தங்கியிருந்தார். கடந்த 30ம் தேதி பணிக்கு சென்று திரும்பிய ஹேமன்ராய், காய்ச்சல், தலைவலிப்பதாக கூறி மாத்திரை எடுத்து கொண்டு துாங்கினார். மறுநாள் 31ம் தேதி உடல்நிலை மோசம் அடைந்ததால், கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர் பரிசோதித்து தலையில் ரத்த கசிவு இருப்பதால் அறுவை சிகிச்சை செய்தனர். ஆப்ரேஷன் முடிந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஹேமன்ராய் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

