/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'சரக்கு' விலை சரமாரி உயர்வு; புதுச்சேரி 'குடி'மகன்கள் 'ஷாக்'
/
'சரக்கு' விலை சரமாரி உயர்வு; புதுச்சேரி 'குடி'மகன்கள் 'ஷாக்'
'சரக்கு' விலை சரமாரி உயர்வு; புதுச்சேரி 'குடி'மகன்கள் 'ஷாக்'
'சரக்கு' விலை சரமாரி உயர்வு; புதுச்சேரி 'குடி'மகன்கள் 'ஷாக்'
ADDED : மே 29, 2025 12:52 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் 'குடி'மகன்கள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில், மதுபானம், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை வாயிலாக கிடைக்கும் வருவாயே அரசுக்கு பிரதான நிதி ஆதாரம். குறிப்பாக, மது விற்பனைக்கு பெயர்போன புதுச்சேரியில், தெருவுக்கு தெரு மதுக்கடைகள், ரெஸ்டோ மதுக்கூடங்கள், சாராயக்கடைகள் உள்ளன. இதன் வாயிலாக, ஆண்டிற்கு 1,500 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
அம்மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மது வகைகளுக்கு கலால் வரி, மதுக்கடைகளுக்கு உரிம கட்டணம், வாகனங்களின் பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மதுபானம் மீதான கலால் வரி, கூடுதல் கலால் வரியை உயர்த்தி, கலால் துறை நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம், 750 மி.லி., பாட்டில் 10 முதல் 47 ரூபாய், 180 மி.லி., பாட்டில், 3 முதல் 11 ரூபாய், பீர் வகைகள், 650 மி.லி., பாட்டில், 6 முதல் 7 ரூபாய், ஒயின், 750 மி.லி., 13 முதல் 26 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. வரி உயர்வு வாயிலாக அரசுக்கு, ஆண்டிற்கு 185 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் கிடைக்கும். புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளதால், 'குடி'மகன்கள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.