ADDED : நவ 27, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாரதிதாசன் கல்லுாரி அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
முத்தியால்பேட்டை, காந்தி வீதி பாரதிதாசன் கல்லுாரி, திருவள்ளுவர் வீதி சந்திப்பு அருகே சாலையோரம் நேற்று காலை திடீரென பள்ளம் உருவானது.
இப்பகுதியில் சாலையோரம் பயன்பாடு இல்லாத கழிவுநீர் வாய்க்கால் மூடப்பட்டுள்ளது.
இதன் அருகிலே5 அடி ஆழகத்திற்கு பள்ளம் உருவாகி உள்ளது.
பள்ளத்தில் பொதுமக்கள் விழுந்து விடாமல் இருப்பதற்காக பேரிகார்டு தடுப்புகள் அமைத்துள்ளனர்.

