/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டி பாலியல் பலாத்கார புகாரில் திடீர் திருப்பம்; கடலுார் ஆசாமி கைது
/
மூதாட்டி பாலியல் பலாத்கார புகாரில் திடீர் திருப்பம்; கடலுார் ஆசாமி கைது
மூதாட்டி பாலியல் பலாத்கார புகாரில் திடீர் திருப்பம்; கடலுார் ஆசாமி கைது
மூதாட்டி பாலியல் பலாத்கார புகாரில் திடீர் திருப்பம்; கடலுார் ஆசாமி கைது
ADDED : செப் 22, 2024 01:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வந்த புகாரில் திடீர் திருப்பமாக, அவரை தாக்கி மொபைல்போன் திருடிய கடலுார் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த 79 வயது பிரஞ்சு குடியுரிமை பெற்ற மூதாட்டி நேற்று முன்தினம் காலை தன்னை சிலர் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாலியல் பலாத்காரம் நடந்ததாக கூறப்படும் துய்மா வீதி ஓட்டலில் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர்.
ஓட்டல் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, துய்மா வீதியில் உள்ள வீடு மற்றும் ரெஸ்டாரண்டுகளில் மர்ம நபர் ஒருவர் ஏறி குதித்து உள்ளே சென்று வெளியேறி வருவதும், பாலியல் பலாத்காரம் நடந்த ஓட்டல் உள்ளே சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தீவிர விசாரணையில், துய்மா வீதி ஓட்டலுக்கு ஏறி குதித்தது, கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் கமல்ராஜ், 37; என தெரியவந்தது.
அங்கு வீட்டை உடைத்து திருடிய வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் விடுதலையாகி வெளியே வந்த கமல்ராஜ், தமிழகத்தின் பல பகுதிக்கு சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்துள்ளார்.
துய்மா வீதியில் பல வீடுகளுக்கு ஏறி குதித்த கமல்ராஜ், மூதாட்டியின் அறைக்கு சென்று அங்கிருந்த மொபைல்போனை திருட முயற்சித்துள்ளார். அப்போது, மூதாட்டி கண் விழித்து எழுந்து சத்தம் போட்டதால், தலையணை வைத்து அழுத்தி கழுத்தை நெரித்துள்ளார்.
மூதாட்டி மயங்கியதால் மொபைல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டது தெரியவந்தது.
இந்நிலையில் மொபைல்போனுடன் பழைய துறைமுகம் வளாகம் அருகில் சுற்றித்திரிந்த கமல்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், நீதிபதி முன்பு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.