நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தீயணைப்புத்துறை தேர்வில் தேர்ச்சி பெறாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி செட்டிக்குளம், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சிங்காரம்; இவரது மகன் வாசு, 28; சமீபத்தில் நடந்த தீயணைப்பு துறை பணிக்கான தேர்வெழுதினார். தேர்ச்சி பெறவில்லை. மன அழுத்தத்தில் இருந்தவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

