நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: யோகாஞ்சலி நாட்டியாலயம் சார்பில் கோடைக்கால பயற்சி வகுப்பு வரும் 5ம்தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, யோகாஞ்சலி நாட்டியாலயா தலைவர் கலைமாமணி ஆனந்த பால யோகி பவனானி கூறயதாவது:
புதுச்சேரி, அய்யனார் நகரில் உள்ள யோகாஞ்சலி நாட்டியாலயத்தில் கோடைக்கால சிறப்பு யோகா, பரதநாட்டிய பயிற்சி வகுப்பு வரும் 5ம்தேதி துவங்குகிறது. வகுப்புகள் மே மாதம் முழுதும் வாரத்தில்திங்கள், செவ்வாய், புதன்.ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.
மாலை 4:15மணி முதல் 4:30 வரை ஸ்லோகம், 4:30 மணி முதல் 5:30 வரை யோகா, 5:30 மணி முதல் 6:00 வரை தற்காப்பு கலை, 6:15 மணி முதல் 7:15 வரை பரதநாட்டிய வகுப்புகள் நடக்கிறது
இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர்0413 -2241561, 94430 51616 எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

