sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு 

சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு 

சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு 


ADDED : ஏப் 25, 2025 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 04:51 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்டான்ஸ்போர்டு பள்ளியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை சி.எஸ்.கே., அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் திறந்து வைத்தார்.

புதுச்சேரி, மூலக்குளம் பிச்சவீரன்பேட்டில் இயங்கி வரும் ஸ்டான்ஸ் போர்டு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா நடந்தது.

விழாவில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்தார்.

சி.எஸ்.கே., மேலாண் இயக்குநர் விஸ்வநாதன், அமைச்சர் சாய் சரவணன் குமார், சிவசங்கர் எம்.எல்.ஏ., சாம் பால் கல்வி அறக்கட்டளை சேர்மன் சாம்பால், அறக்கட்டளை இயக்குநர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம், அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், 'இங்கு துவங்கப்பட்டுள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மூலம் கிரிக்கெட்டில் ஒருநாள், குழந்தைகளாகிய நீங்கள் நல்ல நிலைமைக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமி திறந்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us