/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முடி திருத்தம் செய்யும் உபகரணங்கள் வழங்கல்
/
முடி திருத்தம் செய்யும் உபகரணங்கள் வழங்கல்
ADDED : செப் 03, 2025 08:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; உழவர்கரை தொகுதியை சேர்ந்த முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு, நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை சிவசங்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், உழவர்கரை தொகுதியை சேர்ந்த முடி திருத்தம் செய்யும் பயனாளிகளுக்கு நாற்காலி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமை தாங்கி, 4 பேருக்கு நாற்காலி மற்றும் முடி திருத்தம் செய்யும் உபகரணங்கள் வழங்கினார்.