தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்


ADDED : ஆக 21, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கிராமோத்சவத்தில், முதலிடம் பிடித்த குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி வீரர்களுக்கு, பா.ஜ., பொறுப்பாளர் முத்தமிழகன், சீருடை, ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மண்ணாடிப்பட்டு கொம்யூன், குமாரப்பாளையத்தில் மல்டி ஸ்போர்ட்ஸ் அக்காடமி, ஈஷா யோகா மையம் இணைந்து பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 18வது கிராமோத்சவம் நடந்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்ட அளவில் நடந்த எறிப்பந்து போட்டில் 20 அணிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தின. அதில், குமாரப்பாளையம் வாரியார்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.

இதன் மூலம், இந்த அணி, தமிழ்நாடு தென்மண்டல அளவில் 18 அணிகள் பங்கேற்கும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது. முதலிடம் பிடித்த குமாரப்பாளையம் வாரியார்ஸ் அணியை, தொழிலதிபர் பா.ஜ., பொறுப்பாளர் முத்தழகன் வாழ்த்தி, வீரர்களுக்கு சீருடை, ஷூ உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இப்போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற தேத்தாம்பாக்கம் பிரின்சஸ் அணி சொந்த ஊரில் மைதானம் இல்லாத நிலையிலும், குமாரப்பாளையம் வந்து இரவு வெகுநேரம் காத்திருந்து குறைந்த நாளில் கடும் பயிற்சி எடுத்து மூன்றாம் இடம் பிடித்த அந்த அணி வீரர்களையும் பாராட்டி ஷூ வழங்கினார். மல்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி பவுண்டர் சோமசுந்தரம், காப்பாளர் ஜெயசங்கர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us