/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் நோயாளிகளுக்கு உதவித் தொகை:எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
தொடர் நோயாளிகளுக்கு உதவித் தொகை:எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தொடர் நோயாளிகளுக்கு உதவித் தொகை:எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தொடர் நோயாளிகளுக்கு உதவித் தொகை:எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஜன 02, 2025 06:34 AM

புதுச்சேரி:' ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம்தொடர் நோயைக் குணப்படுத்த நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால்,கடந்த ஓராண்டிற்கு மேலாகா 170க்கும் மேற்பட்ட தொடர் நோயாளிகளுக்கு உதவி தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நேற்று முன்தினம், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து, உடல்நலக் குறைவால்காலத்தாமதமாக புதுப்பித்தல் செய்த மக்களுக்கு, முழு உதவி தொகையையும் வழங்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, இயக்குனர் நிலுவையில் உள்ள பயனாளிகளின் உதவித்தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், இது சம்மந்தமாக துறை செயலர் முத்தம்மாவை சந்தித்து எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.