ADDED : நவ 16, 2026 12:30 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் செல்வமுத்துக் குமாரசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் பர்வதவர்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக் குமார சுவாமிக்கு கந்தசஷ்டி பெருவிழா கடந்த 9ம் தேதி கணபதி பஜையுடன் துவங்கியது.
அன்று முதல் தினமும் காலை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல், இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நேற்று இரவு நடந்தது. அமைச்சர் ராஜவேலு உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 8:00 மணிக்கு தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா, நாளை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
