/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறுவை சிகிச்சை செய்த மாணவர் தற்கொலை
/
அறுவை சிகிச்சை செய்த மாணவர் தற்கொலை
ADDED : ஆக 28, 2025 02:12 AM
புதுச்சேரி: கொம்பாக்கம், பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன், 50; மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகன் மகேஸ்வரன், 23; பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., 2ம் ஆண்டு படித்து வந்தார். படிப்பு தொடர்பாக சென்னையில் தங்கி இன்டர்ஷிப் திட்டம் மேற்கொண்டு வந்தார்.
இதற்கிடையே மகேஸ்வரனுக்கு ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோயால், கல்லீரல் பாதிக்கப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தாய் ரேணுகாவின் கல்லீரலை தானமாக பெற்று, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து, டாக்டர்கள் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மருந்து மற்றும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண் டுமென தெரிவித்தனர். இதனால், மகேஸ்வரன் மற்றவர்களை போன்று தன்னால், இருக்க முடியவில்லையே என, மன உளச்சலில் இருந்து வந்தார்.
கடந்த 20ம் தேதி கொம்பாக்கம் வீட்டில் இருந்த போது, மகேஸ்வரன் எலிபேஸ்ட்டை சாப்பிட்டு விட்டு, மறுநாள் சென்னை சென்ற பின், எலிபேஸ்ட் சாப்பிட்டதை மறைத்து அறுவை சிகிச்சை செய்த இடத்தில் வலி அதிகரித்து உள்ளதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமிக்கப்பட்ட மகேஸ்வரன், சிகிச்சை பலனின்றி 26ம் தேதி இறந்தார். அவர், அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.