தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவ கல்லுாரியில் அறுவை சிகிச்சை மாநாடு

 மருத்துவ கல்லுாரியில் அறுவை சிகிச்சை மாநாடு

 மருத்துவ கல்லுாரியில் அறுவை சிகிச்சை மாநாடு


ADDED : ஜன 30, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சைத் துறை, மாநில அறுவை சிகிச்சையாளர் சங்கம் சார்பில் 6வது பான்சிகான் அறுவை சிகிச்சை மாநாடு மூன்று நாள் நடந்தது.

மாநாட்டை, மணக்குள விநாயகர் கல்வி நிறுவன சேர்மன் தனசேகரன், தேசிய அறுவை சிகிச்சை சங்க தலைவர் மருதுபாண்டியன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவன செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர். மாநாட்டில், 50க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு, நவீன அறுவை சிகிச்சை முறைகள் குறித்து உரையாற்றினர்.

மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா, பதிவாளர் தட்சிணாமூர்த்தி, துணை பதிவாளர் ராஜ்குமார் மற்றும் அறுவை சிகிச்சை துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் மனோகரன், சதீஷ் நல்லாம் வரவேற்றனர். பொது அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ஆண்டோ உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட இளம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மாநாட்டு செயலாளர் அருள்செல்வன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us