தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைப்பு


ADDED : மார் 23, 2024 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2024 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர் : தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, பாகூர் சரகத்தில் உரிமம் வைத்துள்ள 6 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், வாக்காளர்களுக்கு மதுபானம், பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கம் வகையில், தேர்தல் துறையினர் பறக்கும் படைகள் மற்றும் எல்லைகளில் சோதனை சாவடிகளை அமைத்து கண்காணித்து வருகிறது.

மேலும், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, துப்பாக்கி வைத்திருக்க உரிமை பெற்றவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.அதனடிப்படையில், பாகூர் பகுதியில் 7 துப்பாக்கிகளும், கிருமாம்பாக்கத்தில் ஒரு துப்பாக்கி என மொத்தம் 8 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

இதில், வங்கி காவலர்கள் 2 பேருக்கு, கலெக்டர் அனுமதி உடன் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 6 பேர் தங்களது துப்பாக்கிகளை அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us