/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுருளூர் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
சுருளூர் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சுருளூர் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சுருளூர் செங்கழுநீர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : டிச 16, 2025 05:35 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி, சந்தை புதுக்குப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சுருளூர் செங்கழுநீர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, கடந்த 11ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாஜனம், வாஸ்துசாந்தி ஹோமம், மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜை, 12ம் தேதி மாலை பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, திரவியாஹூதி நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் புண்யாஹவாஜனம், கோ பூஜை, ரக்ஷாபந்தனம் நாடி சந்தா னம், நான்காம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஜப ஹோமம், திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, மூலவர் விமானம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை விளக்கு பூஜை நடந்தது.

