/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தீபம் ஏற்றும் போராட்டம்: இந்து முன்னணி தலைவர் அழைப்பு
/
புதுச்சேரியில் தீபம் ஏற்றும் போராட்டம்: இந்து முன்னணி தலைவர் அழைப்பு
புதுச்சேரியில் தீபம் ஏற்றும் போராட்டம்: இந்து முன்னணி தலைவர் அழைப்பு
புதுச்சேரியில் தீபம் ஏற்றும் போராட்டம்: இந்து முன்னணி தலைவர் அழைப்பு
ADDED : டிச 16, 2025 05:36 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று நடைபெறும் முருக பக்தர்கள் தீபம் ஏற்றும் போராட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்க இந்து முன்னணி தலைவர் சணில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம், புதுச்சேரியில் முருக பக்தர்கள் அதிகம் உள்ளனர். தமிழக கோவில்களில் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். மாநிலம் வெவ்வேறாக இருந்தாலும் நமது உணர்வுகள் தமிழகத்துடன் சேர்ந்து இருக்கிறது. இந்நிலையில் காங்., எம்.பி., வைத்திலிங்கம், திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, நீதிபதியை நீக்க வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கைக்கு செவி சாய்த்து முதல் கையெழுத்திட்டிருப்பது முருக பக்தர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தி உள்ளது.
புதுச்சேரி மக்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த முருக பக்தர்களையும் இழிவு படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து இன்று 16ம் தேதி மாலை 3:30 மணிக்கு சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலையை அழைத்துள்ளோம். இது அரசியல் சார்ந்த போராட்டமல்ல. இந்து உணர்வுள்ள முருக பக்தர்கள் திரண்டு, திருப்பரங்குன்றம் மாதிரி துாணை வைத்து, தீபம் ஏற்றும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
ஓட்டுக்காக, இந்துக்களை அவமானப்படுத்தி, புறக்கணிக்கக்கூடாது. அனைத்து கட்சியில் இருந்தும் இந்து உணர்வுள்ள அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

