ADDED : ஜன 11, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மதகடிப்பட்டு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் பெய்த கன மழைக்கு மதகடிப்பட்டு, சன்னியாசிக்குப்பம், கலிதீர்த்தாள்குப்பம், திருபுவனை, திருவாண்டார்கோவில் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வாதானுார் வருவாய் கிராமங்களில் நெல், காராமணி, உளுந்து, மரவள்ளி பயிர்கள் சேதமடைந்தன.
இப்பகுதிகளை மதகடிப்பட்டு பயிற்சிவழி தொடர்புத்திட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார், வேளாண் அலுவலர் நடராஜன், உதவி வேளாண் அலுவலர் பக்கிரி, புவனேஷ்வரி,ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி ஆய்வு செய்தனர்.