/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆரியப்பாளையம் ஆற்று பாலம் உள்வாங்கிய பகுதியில் ஆய்வு
/
ஆரியப்பாளையம் ஆற்று பாலம் உள்வாங்கிய பகுதியில் ஆய்வு
ஆரியப்பாளையம் ஆற்று பாலம் உள்வாங்கிய பகுதியில் ஆய்வு
ஆரியப்பாளையம் ஆற்று பாலம் உள்வாங்கிய பகுதியில் ஆய்வு
ADDED : டிச 16, 2024 05:03 AM

வில்லியனுார் : ஆரியப்பாளையம் புதிய மேம்பால இணைப்பு சாலை உள்வாங்கி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி - விழுப்புரத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 60 கோடி திட்ட மதிப்பில்.360 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் புதிய மேம்பாலம் கட்டுமான பணியைமுடித்து. கடந்த அக்., 28 ம் தேதி புதிய பாலம் திறந்து வைத்தனர்.
இந்நிலையில் தொடர் மழை வெள்ளத்தால் புதியபாலத்தின் ஆரியப்பாளையம் பகுதிஇணைப்பு சாலையில் மெகா சைஸ் விரிசல் விழுந்தது. அதில் எம்சாண்ட் கொட்டிவிரிசலை மூடி மறைத்துவைத்துள்ளனர்.
மேலும் பாலத்தின் வடமங்கலம் பகுதிஇணைப்பு சாலையில் இரு தினங்களுக்கு முன்அரை அடி ஆழத்திற்கு சாலையின் வாய்க்கால் போன்று உள்வாங்கியது.
இதனால் பாலத்தில்உள்வாங்கிய பகுதியை வாகனங்கள் கடக்கும் போது துாக்கி வாரி போடுவதுடன், பல வாகனங்கள் விபத்தில் சிக்கியது. அதனை தொடர்ந்து பாலம் உள்வாங்கிய பகுதியில் கருங்கற்கள் கலந்த 'வெட்மிக்ஸ்' கலவையை கொட்டி, ரோலர் மூலம் சமன் செய்தனர்.
இது குறித்து 'தினமலர்' நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து இணைப்பு சாலை உள்வாங்கிய பகுதியில் நேற்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர்கள்பாலசுப்ரமணியன், வீரசெல்வம், தேசிய நெடுஞ்சாலை பிரிவு செயற்பொறியாளர்கள்ராதாகிருஷ்ணன் மற்றும் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
அப்போது ஒப்பந்ததாரர் ஜீவா உடன் இருந்தார்.

