
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : சொரப்பூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சூரிய பிரபை உற்சவம் நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பழமை வாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில், நேற்று ரத சப்தமியை முன்னிட்டு காலை 6.00 மணிக்கு சூரிய பிரபை சேவை உற்சவம் நடந்தது.
மாலை 4.00 மணிக்கு சேஷ வாகனம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் நடந்தது.மாலை 6.00 மணிக்கு சந்திர பிரபை வீதி புறப்பாடு நடந்தது.
இதில் சொரப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.