/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தர்ம சம்ரக் ஷண சமிதி ஜிப்மரில் இனிப்பு வழங்கல்
/
தர்ம சம்ரக் ஷண சமிதி ஜிப்மரில் இனிப்பு வழங்கல்
ADDED : நவ 02, 2024 07:48 AM

புதுச்சேரி: ஜிப்மரில், தீபாவளியையொட்டி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், இனிப்புகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி, ஒவ்வொரு ஆண்டும், ஜிப்மரில், தீபாவளியையொட்டி இனிப்பு வழங்கி வருகிறது. அந்த அமைப்பானது, ஜிப்மரில் நேற்று நோயாளிகள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு இனிப்பு வகைகளை வழங்கியது.
மேலும் மகப்பேறு மகளிர், புற்றுநோய் மற்றும் வெளிப்புற நோயாளிகள் என பல்வேறு பிரிவுகளிலும், இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சமிதி தலைவர் சீதாராமன், செயலாளர் கணேசன், உறுப்பினர்கள் சிவசாமி, வெங்கடேசன், ராஜேந்திரன், சசிகலா, ஜெயராமன் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

