ADDED : ஆக 13, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள மரியம்மன் கோவிலில் அமாவாசை தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதன்படி அமாவாசை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு காலை இளநீர், பால், சந்தனம், மஞ்சள் கொண்டு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
