sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/டி - 20 கிரிக்கெட் போட்டி: லாஸ்பேட்டை அணி வெற்றி

டி - 20 கிரிக்கெட் போட்டி: லாஸ்பேட்டை அணி வெற்றி

டி - 20 கிரிக்கெட் போட்டி: லாஸ்பேட்டை அணி வெற்றி


ADDED : ஜன 19, 2024 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 07:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி - 20 கிரிக்கெட் போட்டியில், லாஸ்பேட்டைஅணி வெற்றி பெற்றது.

புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேசன் சார்பில், உள்ளூர் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 15வது டி - 20 கிரிக்கெட் போட்டி லாஸ்பேட்டை மைதானத்தில் கடந்த அக்டோபர் 25ம் தேதி துவங்கியது. லாஸ்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கிட்லா சத்திய நாராயணா,தமிழ்நாடு முன்னாள் சீனியர் கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதுச்சேரியில் உள்ள 32 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதன் 24வது போட்டியில் லாஸ்பேட்டை மற்றும் என்.ஆர்.சன் லைட் கிரிக்கெட் அணிகள் மோதின. முதலில் ஆடிய லாஸ்பேட் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கணபதி 63 பந்துகளில் 16 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் உள்பட 109 ரன்களை குவித்தார். தேவா 22 பந்துகளில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்உட்பட 49 ரன்கள் எடுத்தார்.

பின் களமிறங்கிய என். ஆர். சன்லைட் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்தது. அந்த அணியின் குமரேசன் 46 ரன், கவிபிரசன்னா 32 ரன் எடுத்தனர். முருகன், அங்கப்பன் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். சுரேந்தர்,நரேஷ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். லாஸ்பேட்டை அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன், கணேஷ் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us