/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டேபிள் டென்னிஸ் சங்கம் துவக்கம்
/
டேபிள் டென்னிஸ் சங்கம் துவக்கம்
ADDED : அக் 09, 2025 02:04 AM

புதுச்சேரி: பாண்டிச்சேரி டேபிள் டென்னிஸ் பிளேயர்ஸ் டெவலப்மென்ட் பவுண்டேஷன் துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி தனியார் ஓட்டலில் நடந்த விழாவில், தலைமை விருந்தினர் அச்சந்த ஷரத் கமல் பேசுகையில், 'இளம் வீரர்களை உருவாக்கும் இத்தகைய முயற்சிகள் புதுச்சேரி டேபிள் டென்னிசிற்கு புதிய ஆற்றல் அளிக்கும' என்றார்.
புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ராம் மோகன் சிங், முன்னாள் மாநில சாம்பியன்கள் அருண், பிரமோத் ஜார்ஜ் கலந்து கொண்டனர். தலைவர் செல்வமுத்து குமாரன் நன்றி தெரிவித்தார்.
கனகலிங்கம், செந்தில்நாதன், விக்னேஷ், டாக்டர்கள் பிரதீப், அபிேஷக் ஆகியோர் இயக்கத்தின் குறிக்கோள், சேவை திட்டங்கள் குறித்து பேசினர். விழாவில், பவுண்டேஷனின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.