/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரி மாஜி மாணவர்கள் சந்திப்பு
/
தாகூர் கல்லுாரி மாஜி மாணவர்கள் சந்திப்பு
ADDED : ஆக 30, 2025 11:49 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் பொன்விழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தாகூர் கலைக்கல்லுாரி 1961ம் ஆண்டு 3 துறைகளுடன் துவங்கப்பட்டு, தற்போது 16 துறைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.இக்கல்லுாரியில் கடந்த 1972- 75ல் படித்த மாணவர்கள் 50ம் ஆண்டு பொன் விழா சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கருப்பசாமி தலைமை தாங்கினார். முன்னாள் பேராசிரியரும், முன்னாள் எம்.பி.,யுமான ராமதாஸ், முன்னாள் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, உயர்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமானுஜம் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
அப்போதைய விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தற்போதய பல்வேறு துறை தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட பேராசிரியர்களும், மாணவர்களும் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர், முன்னாள் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.இக்கல்லுாரியில் படித்த மாணவர்கள் பலரும் அமெரிக்கா, கனடா, பிரான்சு போன்ற நாடுகளிலும், ராணுவ அமைப்பில் மேஜர் ஜெனரல் ஆகவும், உயர் பதவிகளிலும், வங்கி மேலாளர்களாகவும், புதுச்சேரி அரசு பதவிகளிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.