/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு உற்பத்தி கூடத்தில் தாசில்தார் ஆய்வு
/
பட்டாசு உற்பத்தி கூடத்தில் தாசில்தார் ஆய்வு
ADDED : அக் 15, 2025 07:13 AM
பாகூர் : பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள், பட்டாசு உற்பத்தி கூடத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள்,நெட்டப்பாக்கத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி கூடத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தொழில் உரிமம், பட்டாசு உற்பத்திக்கான ஆவணங்கள், பாதுகாப்பு அம்சங்கள், அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தான் பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிறதா, கையிருப்பில் உள்ள வெடி மருந்து விவரங்கள், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுகான பாதுகாப்பு ஏற்பாடுகள், வெடிமருந்து குடோனில் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.