sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழர் பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுப்பு: 3வது பட்டியலும் வெளியாகிறது

தமிழர் பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுப்பு: 3வது பட்டியலும் வெளியாகிறது

தமிழர் பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுப்பு: 3வது பட்டியலும் வெளியாகிறது


ADDED : டிச 24, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 24, 2024 05:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி புல்வார்டு பகுதியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டங்களும் கணக்கெடுத்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக புல்வார்டு அப்பாலும் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன.

புதுச்சேரியை யுனொஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக, 114 பாரம்பரிய கட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதில், விடுப்பட்ட 131 பாரம்பரிய கட்டடங்கள் இரண்டாம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் பழமையான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், தனியார்கள் கட்டடங்களும் இடம் பெற்றன. இந்த இரண்டு பட்டியலிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதற்கிடையில் புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டடங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டு, புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே விரைவில் மூன்றாவது பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலும் வெளியாகிறது.

புல்வார்டு பகுதி மட்டுமின்றி புல்வார்டு பகுதிகளுக்கு அப்பாலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரியில் ஏராளமான கட்டடங்கள் உள்ளன. குறிப்பாக ஏ.எப்.டி., சுதேசி, பாரதி ஆலைகள் உள்ளன.

இதுமட்மின்றி வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், வில்லியனுார் மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கட்டடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன.

வ.உ.சி., கலவை கல்லுாரி என, பாரம்பரிய கட்டடங்களுக்கு புதுச்சேரி அரசு ஒதுக்கி பழமை மாறாமல் கட்டி தருகிறது. ஆனால் இந்த பராம்பரிய கட்டடங்களின் பராமரிப்பிற்கு தொலைநோக்கு பார்வையுடன் போதிய சிறப்பு கவனம் செலுத்தப்படவில்லை.

பாரம்பரிய கட்டடத்திற்கு பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது. சீரான இடைவெளியில் வெள்ளை அடிப்பது, மழை நீர் கசிவுகளை சரி செய்வது என பராமரிப்பு செய்ய வேண்டும். அதற்காக சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.

பட்ஜெட்டில் புதுச்சேரி அரசு மகளிருக்கான சிறப்பு நிதியம், இளையோர் சிறப்பு நிதியம், பசுமை நிதியம் போன்ற சிறப்பு வரவு செலவு திட்ட கூறுகளை 2023-24ம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தி, அதற்காக 2,391 கோடியை ஒதுக்கீடு செய்தது. நடப்பாண்டில் கூட இந்த சிறப்பு வரவு செலவு திட்ட கூறுகளுக்காக 2,442.18 கோடியை ஒதுக்கீடு செய்தது.

அந்த வகையில் பட்ஜெட்டில் பாரம்பரிய கட்டடத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு, பராமரிப்பிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us