/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை பயிலரங்கம்
/
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை பயிலரங்கம்
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை பயிலரங்கம்
காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழிசை பயிலரங்கம்
ADDED : மார் 19, 2026 04:41 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்த் துறை சார்பில் பாடிப் பழகுவோம் தமிழிசை பயிலரங்கம் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது.
நிறுவன இயக்குநர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். தமிழ்துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இசையறிஞர் பத்மநாபன் கலந்துகொண்டு, தமிழிசை வரலாற்றின் சிறப்பு குறித்து பேசுகையில், 'தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், பல்சமய பாடல்களில் காணப்படும் இசைப்பகுதிகளை சான்றுகளுடன் விளக்கினார்.
தமிழிசை மூவர் அளித்துள்ள தமிழிசை பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலைமாமணி ராசமாணிக்கம் குழுவினர் பாரதியார், பாரதிதாசன், புதுவை சிவம், வாணிதாசன், பெருஞ்சித்திரனார், தமிழ் ஒளி, தங்கப்பா பாடல்கள், பல்சமய பாடல்களையும் பாடி மாணவர்களுக்கு இசைத்தமிழின் சிறப்பு குறித்து விளக்கினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறை பேராசிரியர் குமாரவயலுார் பாலச்சந்தர் ஓதுவார் திருமுறைகளில் காணப்படும் இசைச்சிறப்புகள் குறித்து பாடி விளக்கினார்.
பேராசிரியர் சிவகவுரி, சேஷாத்ரி, சித்தன் ஜெயமூர்த்தி, ரகுநாத் மனே கலைஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் இசைத்தமிழின் சிறப்பு குறித்து பேசினர்.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள், புதுவை தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.

